Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com
Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.
திரு .தெ.வே. பகவதிப்பெருமாள்Back to List


பெயர்:                             தெ.வே. பகவதிப்பெருமாள்
பிறந்த இடம்:                          கடுக்கரை
பிறந்த நாள்:                           10-06-1937
தாயார்:                               க. முத்தம்மாள்
தந்தையார்:                         P.வேலுப்பிள்ளை
வாழும் இடம்:                      தெரிசனம்கோப்பு
திருமணம்:                            11-12-1967
மனைவி :                    திருமதி.  பாக்கியம்  (சுசீந்திரம்)
மகன்:                             B. வேலுப்பிள்ளை
                                  கணணிப்பொறியாளர்  
மருமகள்  :                          K.V. கவிதா
பேத்தி  :                            K.V. சானியா
பேரன் :                             K.V. பாரத்

பாரதிய வெள்ளார் ஐக்கிய சங்கத்தின்  மாநிலப் பொறுப்புக்குழு உறுப்பினரான இவர் 1947   ல்  தெரிசனங்கோப்பில் நடைபெற்ற சுதந்திரதின விழா நிகழ்வில் தனது 11 வயதில் கலந்துகொண்டு தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியவர்
1950  சிறுவர்களுக்கென்று சிறுவர் மன்றம் அமைத்து சமூகப்பணி தொடங்கியவர்.

1952 ல் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில்  காங்கிரஸ் பேரியக்கத்திற்காக தேர்தல்பணியில்  திரு மகாதேவன்பிள்ளை மற்றும் கோ. முத்துகருப்பன் ஆகியோருடன் இணைந்து பணிசெய்தவர்.

1954 ஆகஸ்டு 11 ம் தேதி  நடந்த திருத்தமிழக  விடுதலை தினமாக கொண்டாடப்பட்டபோது இவர் புதப்பாண்டி அரசுப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார் அப்போது  மாணவர்களை ஒன்று திரட்டி அரசாங்கத்தின் தடையை மீறி  ஊர்வலமாக சென்று திட்டுவிளை ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோது  புதை சோ. அண்ணாமலை  கடுக்கரை தம்புரான் தோழப்பிள்ளை ஆகியவர்களுடன் கைது செய்யப்பட்டு புதப்பாண்டி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் பள்ளிப்படிப்பு தடையாகி  படிப்பு என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

1981  1982 ஆகிய ஆண்டுகளில் அரசின் சார்பில் நடைபெற்ற சமூக நலத்திட்டங்களுக்கு அடிகோலியாக இருந்து செயல்பட்டார். 1982 ல்   தமிழக எல்லை இணைப்பு வெள்ளிவிழாவில் தமிழக அரசால் எல்லைப்போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்ட கேடயத்தை ஜீவா போக்குவரத்துக்கழக பெயர்மாற்றத்தை கண்டித்து திருப்பி அனுப்பியவர்.  

       தமிழக அரசு கன்னியாகுமரிமாவட்டத்தில் இயங்கி வந்த அரசுப்போக்குவரத்துக்கழகத்திற்கு பொதுவுடமை வீரர் ஜீவா பெயர் வைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.

       1986 ல் இருந்து  1991 வரையிலும் தெரிசனங்கோப்பு ஊராட்சியின் தலைவராக தேர்வுசெய்யப்பட்டு 5 ஆண்டுகாலம் அரிய பல நலத்திட்டப்பணிகளை மேற்கொண்டார்.  1992 ல்  மகாத்மாகாந்தி மிஷன் ஸ்தாணுலெட்சுமி  முதியோர் இல்லம் ஆகியவற்றின் பொதுச்செயலராக  சேவைபுரிந்தார்.

2006 ல் சென்னையில் நடைபெற்ற  தமிழ்மாநில பொன்விழாவில் எல்லைப்போராட்ட தியாகிகளை அழைத்து தமிழக அரசு கௌரவப்டுத்தி விருதுகளை வழங்கியது. அதில் கலந்து கொண்டு அன்றைய முதலமைச்சர் அவர்களால் விருது வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.  தற்போது தமிழ்நாடு தெற்கெல்லை இணைப்புப் போராட்ட தியாகிகள் சங்க பொதுச்செயலராக தொண்டாற்றுகிறார்.


தற்போது பாரதிய வெள்ளாளர் ஐக்கிய சங்கத்தின்  மாநிலப்பொறுப்புக்குழு உறுப்பினராக நமது சமுதாயத்தவர்களின் நலன் ஒன்றையே கருத்தாகக் கொண்டு அதற்காக 2006 முதல் பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு தீவிரமாக செயல்பட்டுவரும்  72 வயதான ஒரு சுறுசுறுப்பான மனிதத்தேனியாக வாழும் தியாகி விருது பெற்ற இளைஞர் நாமும்  இவரை நமது வாழ்வின் முன்னுதாரனமாக கொள்ளலாமே!