Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com
Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.
திரு . S . தாணுமூர்த்திBack to List

பெயர்:         எஸ். தாணுமூர்த்தி
பிறப்பு:         22-05-1974
பிறப்பிடம்:      புதப்பாண்டி
தந்தையார்:     ஆர். சண்முகவேல்
            ( பணிநிறை மாவட்ட கூட்டுறவு வங்கி மேலாளர்)
தாயார்:        இ. மீனாட்சி
            (புதப்பாண்டி கணேசபிள்ளை மகள்)
மனைவி:      எஸ்.பி. சுபா
            ( ஆசியை   கரோல் மெட்ரிக்குலெசன் மேநிலைப்பள்ளி)
மகள்  :     T.S. மீனாஷிவானி


பாரதிய வெள்ளாளர் ஐக்கிய சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட  செயலராக தொண்டாற்றும் இவர் தனது பள்ளிப்படிப்பை  குறத்தியறை கொட்டாரம் செண்பகராமன்புதூர் வடசேரி ஆரல்வாய்மொழி ஆகிய பள்ளிகளில் முடித்தார். அதன் பின்னர்   ஒவியஆசிரியருக்கான பயிற்சி   தொழிற்பயிற்சி  ஆகியவற்றை  முடித்தவர்.    பல்தொழிற் பயிற்சியாளரான இவர்   வரலாற்றில்  முதுகலை பட்டம் பெற்றவர்.

     இவர்  இயற்கைக் காட்சிகள்  மற்றும் கடவுளர்களின் திரு உருவப்படங்கள்  ஆகியவற்றை தத்ரூபமாக வரையும் திறமை பெற்றவராவார்.
சமூகத்தில் இளைஞர்கள்  அனைவரும் கல்வி அறிவு பெற்வர்களாகவும்    தொழிற்பயிற்சி பெற்று தனது வாழ்கையையும் தனது குடும்பத்தையும் காக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்  என்ன சீரிய சிந்தனை கொண்டவர்.

அதனுடைய உந்துதலால்    தொழிற்பயிற்சி பள்ளி  (ஐ.டி.ஐ)  துவக்கி குறைந்த கட்டணத்தில் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கிறார். இந்த பள்ளியின் தாளாளரராகவும் இருக்கிறார். இவரது ஐ.டி.ஐ யில்  வருடம் தோறும்  3  பேருக்கு இலவச பயிற்சி அளிக்கும் சேவையை மேற்கொண்டு வருகிறார.   பயிற்சி முடித்த அனைவருக்கும் வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்து வருகிறார். இவரால்   பயிற்சி பெற்று  அயல்நாடுகளிலும்  நம்நாட்டிலும் ஏராளம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள் என்றால் அது மிகையல்ல.
       2003  ல் தன்னை பாரதிய வெள்ளாளர் ஐக்கிய சங்கத்தில்  தன்னை இணைத்துக்கொண்டு மாவட்ட செயலாளர் பொறுப்பில் பயணிக்கிறார். இவர் நமது சமுதாயத்தவரை ஒருங்கிணைக்கும் பணியில் மாநிலப்பொதுச்செயலாளர் மற்றுமுள்ள நிர்வாகிகளுடன்   நம்மவர்கள் வாழும் ஒவ்வொரு ஊர்களுக்கும் நடந்தே சென்று நம்மவர்களை ஒருங்கிணைத்து உறுப்பினராக்கியவர்.  இவரால் சங்கம் பல உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அதிர்ந்து பேசாத நல்ல குணமும்  பிறருக்கு உதவ வேண்டும் என்ற மனப்பாங்கும கொண்டவர்.  சங்கம் சார்ந்த அனைத்து விழாநிகழ்வுகளிலும் இவரது கைவண்ணத்தில் தயாராகும் அட்டைகளும் விளம்பரங்களும் ஏராளம்.  தனக்கு அளித்த பொறுப்பை சிரமேற்கொண்டு செய்யும் செயலாற்றல் உள்ளவர்.


38 வயதான இந்த இளைஞர் எண்ணத்தையும் செயலையும்   நாமும் பின்பற்றினால் இந்த இளைஞர் சமுதாயம்   வெற்றிப் பாதையிலே தொடர்ந்து பயணிக்கும் என்பதில் சற்றேனும் ஐயமில்லை.