Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com
Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.
Mr.M. சண்முகம் பிள்ளைBack to List


பெயர்:                       எம். சண்முகம்பிள்ளை
பிறப்பு:                       04-06-1958
பிறப்பிடம்:                     ஈத்தாமொழி நாகர்கோவிலில் இருந்து
                           சுமார் 9 கி.மீ தொலைவில்உள்ளது
தாயார் :                     திருமதி ஜெகதாம்பாள் என்ற சுப்பம்மாள்
                           குலசேகரபுரம்  (ஒசரவிளை)
தந்தையார்:                   திரு. எஸ். மாதேவன்பிள்ளை  
                       (பணிநிறை உள்ளாட்சித்துறை பணியாளர்)
                           ஈத்தாமொழி

மனைவி:                 திருமதி.  ஜி. வாசுகி
                  ( நாகர்கோவில்  கணேசபிள்ளை  மகள்)


பாரதிய வெள்ளாளர் ஐக்கிய சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலரான இவர் தனது இளம் வயதிலேயே இறைபக்தியும்  சமுதாய சிந்தனையும் கொண்டவராக திகழ்ந்தார். தனது பள்ளிப்பருவத்திலேயே மேடைப் பேச்சாளர். பள்ளிப்படிப்பை  ஈத்தாமொழி அரசு உயர்நிலைப்பள்ளியில் முடித்தார். நாகர்கோவில் தெ.தி. இந்துக்கல்லூரியில்  வணிகவியல் துறையில் பட்டம் பெற்றவர்.

      1980 ல்  கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்த கேந்திரத்தில்  கிராம வளர்ச்சித்திட்டத்தின் கீழ்  கள அலுவலராக பணியாற்றியவர். இப்பணிகாலத்தில்  திருக்கோவில்களில் ஆன்மீக சொற்பொழிவுகள் பல செய்தவர்.  சமூகச் சிந்தனை கொண்ட பொருள்களில்  பல இடங்களில் பட்டிமன்றங்களும்    வழக்காடு மன்றங்களிலும் கலந்து கொண்டு சிந்தனையைத்தூண்டும் வகையில் பேசும் ஆற்றல்மிக்கவர்.   பல திருக்கோவில்  குடமுழுக்கு விழாவின்போது  விழாகுறித்து நேர்முக வர்ணணை செய்யும் ஆற்றல் மிக்கவர்

     1980 களில்  தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறைக்கு உட்பட்ட  திருக்கோவில்களிலும்   அரசு மேல்நிலப்பள்ளியிலும் மேல்நிலைக்கல்வி ஆசிரியராக  தற்காலிக அரசுப்பணியாளராக பணியாற்றியவர்.  தனது பணிக்காலத்தில்  அகில இந்திய வானொலியில் குறள்கூறும் சிந்தனைகள்  என்ற பொருளில் தொடர் சொற்பெருக்கு  மற்றும் கவிமணியின்  பாடல்கள்  மேலும் பல்சுவை நிகழ்ச்சி போன்ற வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்.

    

திருவள்ளுவர் பேரவை  என்ற அமைப்பை  பல கல்லூரி பேராசிரியர்களை ஒன்றிணைத்து உருவாக்கி இந்த அமைப்பின் செயலராக பணிசெய்தவர். இதன் மூலம்.  பல மாணாக்கர்களை சிறந்த பேச்சாளர்களாக உருவாக்கும் பணியில் ஈடுபட்டவர். இந்த அமைப்புமூலம இலவச டியுசன் மாணவமாணவியருக்கு அளிக்கப்பட்டது.

     1990 களின் இறுதியியல்  தனது சொந்த ஊரான ஈத்தாமொழி வெள்ளாளர் சமுதாயம் மற்றும் இதற்கு உட்பட்ட அருள்மிகு தற்ம விநாயகர் தேவஸ்தானத்தின் துணைத்தலைவராக பொறுப்பேற்று. இந்த சமுதாயத்திற்கு உட்பட்ட அருள்மிகு தற்மவிநாயகர் திருக்கோவில்   மற்றும் அருள்மிகு  வீரபத்ரேஸ்வரர் உடனுறை  முத்தாரம்மன் திருக்கோவில்களை புனரமைக்கும் பணியில் திருப்பணி மேற்கொண்டு புதிதாக திருக்கோவில் கட்டி குடமுழுக்கு விழா நடத்தியவர்.  இந்த குடமுழுக்கு விழா சர்வ சமய  குடமுழுக்கு விழாவாக  இஸ்லாமிய சமயத்தைச்சார்ந்த  மதகுரு   கிருத்தவ சமயத்தைச்சார்ந்த  மதகுரு  இந்து சமயத்தைச் சார்ந்த துறவி என அனைவரையும் அழைத்து அவர்கள் முன்னிலையில் திருக்கோவில் குடமுழுக்கை நடத்தியவர்.  எந்த செயலானாலும்  தொலைநோக்கு  மற்றும் எதார்த்மான சூழல் இவற்கை கருத்தில் கொண்டு செயலாற்றுபவர்.   

  

  2003  ல்   கேரளத்தைத் தலைமையிடமாகக்கொண்டு துவக்கப்பட்ட  பாரதிய வெள்ளாளர ஐக்கிய சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலராக பொறுப்பேற்று நமது சமுதாய உறவினர்களின் நலன் ஒன்றையே எண்ணி செயல்படும் பண்பாளர்.   சங்கத்தின் சார்பில் உருவான வள்ளலார் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர்களில் ஒருவராகவும் அதன் பொதுச்செயலராகவும் பணியாற்றுபவர்.  ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சங்க ஆண்டுவிழாவின போது நமது சமுதாயத்தைச் சார்ந்த  சுமார்  300 மாணவமாணவியருக்கு  மேற்பட்டோருக்கு  கல்விப்பரிசு மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு  சங்க பொறுப்பாளர்களோடு சமுதாய ஆர்வலர்களை அணுகி அவர்கள் மூலம் அளிக்கசெய்வதில் பெரும் பங்காற்றுபவர். அதுபோல சமுதாயத்தில் சாதனைபடைத்த சாதனையாளர்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோருக்கு சாதனையாளர்கள் விருது வழங்கும் பணியிலும் பெரும்பங்காற்றுபவர். விருதுகளின் பெயர்கள் எல்லாம் இவரது எண்ணத்தில் உருவாகுபவைகளாகும்.   2007 ல் நமது சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கக்கோரி நடைபெற்ற  சுமார் 7000 பேர் கூடி நடத்திய ஆர்ப்பாட்டம்  அரசையும் மற்ற சமுதாயத்தவரையும்  நிமிர்ந்து பார்க்க செய்தது. அதன் பின்னர் நடைபெற்ற உண்ணாவிரதம் ஆகியவற்றில் இவரது பங்கு அலாதியானது. சமுதாய நலனே இவரது சிந்தனை.
           


   பாரதிய வெள்ளாளர் ஐக்கிய சங்கம்  தமிழகத்தில் உள்ள அனைத்து சங்கங்களோடும் தொடர்பினை வைத்துக்கொள்வதற்கு  பெரும் பங்காற்றுபவர். இவரது செயல்பாட்டாலும் இவரோடு இணைந்து செயல்படுபவர்களாலும்  சங்கம் பீடுநடை போடுகிறது என்றால் அது மிகையல்ல. இவரது நடையை  நாமும் தொடரலாமே......